Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரயில் நிலையங்களில் 'ஸ்மார்ட்' குப்பைத் தொட்டிகள்

ரயில் நிலையங்களில் 'ஸ்மார்ட்' குப்பைத் தொட்டிகள்
டெல்லியில் உள்ள ரயில்வே வாரியத்தின் உணவகத்தில் நிறுவப்பட்டுள்ள ‘ஸ்மார்ட்’ குப்பைத் தொட்டி.

இந்த குப்பை தொட்டிகளின் பயன் சிறப்பாக இருந்தால், தேவைப்படும் ரயில்நிலையங்களில் நிறுவுதற்காக நடவடிக்கைகளை எடுக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்து அதிக குப்பையக் கையாளும் நிறுவனமாக ரயில்வே உள்ளது. நாடு முழுவதும் ரயில்வேயில் நாளொன்றுக்கு 670டன் குப்பை சேருகிறது. தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயில் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 1.20 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.

அதிக பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் உள்ள குப்பைத் தொட்டிகள் உடனுக்குடன் நிரம்பி வழிகின்றன. அதனால் குப்பை சிதறுவதுடன், ரயில் நிலையத்தின் தூய்மை சீர்கெடுவதற்கும் வழிவகுக்கின்றன. எனவே, திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026ன் படி, ரயில்வேயில் குப்பையைக் கையாளுவதில் ‘தேர்ந்த முறைகளை’ செயல்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, தற்போது சந்தையில் தாரளமாக கிடைக்கும் தரம் உயர்ந்த ‘ஸ்மார்ட்’ குப்பைத் தொட்டிகளை (Waste Compactor Smart Bins) நிறுவ ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ரயில்வே வாரியத்தின் உணவகத்தில், 2 ஸ்மார்ட் குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட்டன. அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதை வாரியம் உறுதி செய்துள்ளது.

இந்த குப்பைத் தொட்டிகள் குப்பையை அமுக்கி வைத்துக் கொள்ளும் வசதியை கொண்டவை. இந்த அமுக்கி வைத்துக் கொள்ளும் வசதி குப்பை வழிந்து சிதறவதை தடுக்கும்.

இந்த ‘ஸ்மார்ட்’ குப்பைத் தொட்டிகளின் மின்னணு செயல்பாடுகள் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும். அதனால் குப்பை நிரம்பியது உடனடியாக, சம்பந்தப்பட்ட அமைப்புக்கு அல்லது அலுவலருக்கு தெரிந்து விடும். அதன் மூலம் குப்பை நிரம்பிய உடனேயே, அவற்றை அகற்றும் செயல்பாடுகள் பயன்பாட்டுக்கு வந்து விடும்.

அதிக அளவு திட கழிவுகளை அமுக்குவதற்கு ஏற்ற இத்தகைய கழிவு அமுக்கி மின்ணணு குப்பைத் தொட்டிகளை சோதனை அடிப்படையில் பயன்படுத்த, ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

அதன் பயன் சிறப்பாக இருந்தால், தேவைப்படும் ரயில்நிலையங்களில் நிறுவுதற்காக நடவடிக்கைகளை ரயில்வே மண்டல மேலாளர்கள் உடனடியாக எடுக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதனால், விரைவில் ரயில் நிலையங்களில் மின்னணு ஸ்மார்ட் குப்பைத் தொட்டிகளைக் காணலாம்.


ஸ்மார்ட் குப்பைத் தொட்டிகளின் சிறப்பம்சங்கள்:

  • கொள்ளளவு 200 லிட்டர்.
  • சூரிய/மின்சார சக்தியில் இயங்கும்
  • குப்பையை தொடாமலேயே கையாளும் வசதி.
  • தினமும் 100 முறை குப்பையை அமுக்கி, அகற்றும் வாய்ப்பு.
  • ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் குப்பையின் அளவைஅறியும் வசதி.
  • நிரம்பிய குப்பை அளவை செல்போன், கம்ப்யூட்டர்களில் தெரிந்துகொள்ளும் வசதி.
  • சமூக விரோதிகள் குப்பைத் தொட்டியை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உள்நோக்கி திறக்கும் மூடி.
  • பறவைகள், விலங்குகள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலான குப்பை போடும் திறவு.
  • மழை, வெயில் என வானிலையால் பாதிக்காத உறுதியாக வடிவமைக்கப்பட்ட குப்பைத் தொட்டி.

முந்தைய செய்தி
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கு தேசிய விருது
அடுத்த செய்தி
Piyush Goyal asks ministry to identify AI-proof professions

தொடர்புடைய செய்திகள்